கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வியாழன், 19 டிசம்பர், 2013

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

"கொற்கை" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
ஜோ டி குருஸ் எழுதிய "கொற்கை" நாவல், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமம் உவரியை சேர்ந்தவர் ஜோ டி குருஸ். சென்னை வணிக கப்பல் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மூலத்துறை அரசுப்பள்ளியில் மாணாக்கர் கணித மன்றம் தொடக்க விழா
     அரசுப்பள்ளி  மாணவர்கள், கல்வி இணைச் செயல்பாடுகளில் திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வாரியாக மன்றங்கள் அமைத்துச் செயல்பட உத்தரவிட்டுள்ளது. அதன்படி   மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29-11-2013) மாணாக்கர் கணித மன்றம் தொடங்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை வகித்து மன்றத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியை முனியம்மாள் வரவேற்புரை நல்கினார். “பூஜ்ஜியம் கண்டுபிடிப்பில் இந்தியர்களின் பங்கு” என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிக்குமார் பேசினார். “அன்றாட வாழ்வில் கணிதத்தின் அவசியம்” என்ற தலைப்பில் ஆசிரியைகள் அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் பேசினர்.
 ‘கணித விநாடி வினாப் போட்டி’,
 ‘சொல்லுங்கள்..! வெல்லுங்கள்..!!’,
 ‘புதிரை விடுவித்தால் நீ புத்திசாலி’
என கணிதம் தொடர்பான பல்வேறு போட்டிகள் மாணவர்களால் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கணித ஆசிரியர் திருமுருகன் செய்திருந்தார்.