கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 25 மார்ச், 2014

வெற்றியின் ரகசியம்

   டாக்டர். ஜார்ஜ் வாஷிங்டன்  கார்வர்  ஒரு புகழ்பெற்ற  விஞ்ஞானி.
ஒருவர் அவரைக்  கேட்டார். ''உங்களது  வெற்றியின் ரகசியம்  என்ன?''

       டாக்டர் ஜார்ஜ்  வாஷிங்டன்  கார்வர் அமைதியாகச் சொன்னார். 
      ''அது ஒன்றுமில்லை.  தினமும்  பிராத்தனை செய்யும்போது, எல்லாம்  கடவுளின்  கருணையைச்  சார்ந்தது  என்று  எண்ணுவேன்.  ஆனால், என்  வேலைகளைச்  செய்யும்போது,  எல்லாம்  என்  செயலைச்  சார்ந்தது  என்று  எண்ணியபடி  என்  வேலையில்  ஈடுபடுவேன்.இதுதான ரகசியம்"
      
      'விஞ்ஞானிகள் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்'-புத்தகத்திலிருந்து...
       

ந.பாலசாமி
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

ஞாயிறு, 9 மார்ச், 2014

வண்ண மயமான வடிவியல் செயல்திட்டம்

வண்ண மயமான வடிவியல் செயல்திட்டம்

    எட்டாம் வகுப்பு வடிவியல் பாடத்தில் உள்ள பொதுமைய வட்டங்கள் மற்றும் வட்ட வலயங்கள் ஆகியவற்றை சார்ட் பேப்பரில் செய்து காட்டி மதிப்பீட்டை அள்ளிய மாணவிகள்...



சிரிப்பு வருது...சிரிப்பு வருது...

சிரிப்பு வருது...சிரிப்பு வருது...

    மிஸ்டர் லூபா தன் நண்பனிடம் "நாம் இருக்கும் நாடு எது?" என்று கேட்டார். "இந்தியா" என்றார் நண்பன். உடனே மிஸ்டர் லூபா "தவறு" என்றார். "அப்படியென்றால் நாம் இருக்கும் நாடு எது என்று நீயே சொல்லு" என்றான் நண்பன். அதற்கு மிஸ்டர் லூபா "வியட்நாம்" என்றார். "எப்படி?" என்று நண்பன் கேட்ட போது,  "வியட்நாம் என்பதில்தானே 'நாம்' என்று இருக்கிறது? அதனால் நாம் இருக்கும் நாடு வியட்நாம்தானே" என்றார்.

கணித அடிப்படைச் செயல்பாடுகள் திறனறித் தேர்வு

கணித அடிப்படைச் செயல்பாடுகள் திறனறித் தேர்வு
     எங்கள் பள்ளியின் மாணாக்கர் கணித மன்றம் சார்பில் இன்று(24-02-2014) கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கு அடிப்படைச் செயல்பாடுகளில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது.
     5,6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் அனைத்து கணக்குகளையும் தவறின்றி செய்த மாணவ மாணவிகள் பரிசுகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பரிசு பெற்றோர்..
ஐந்தாம் வகுப்பில்..1.கோகுல்  2.ஸ்ரீநி
ஏழாம் வகுப்பில்...1.ஜவஹர் 2.மதுஸ்ரீ
எட்டாம் வகுப்பில்...1.முகிலவன்  2.சர்மிளா



உணவும் ஜீரண நேரமும்

உணவும் ஜீரண நேரமும்
மனிதன் உண்ணும் உணவுப் பொருட்கள் ஜீரணமாக எவ்வளவு நேரம் ஆகிறது என்பது பற்றி அமெரிக்க மருத்துவ நிபுணர் வில்லியம் ஆய்ந்தறிந்தவை கீழே தரப்பட்டுள்ளன..
உணவுப் பொருள்
ஜீரண நேரம்
அரிசி சாதம்
1 மணி நேரம்
பால்
2 மணி நேரம்
தயிர்
3 மணி நேரம்
நெய்
31/2 மணி நேரம்
பருப்பு
21/2 மணி நேரம்
வேக வைத்த முட்டை
31/2 மணி நேரம்
மீன் உணவு
21/2 மணி நேரம்
கோழி இறைச்சி
4 மணி நேரம்
மாட்டு இறைச்சி
5 மணி நேரம்

ஆதாரம் : FOODS AND DIGESTION

வண்ண ரிப்பன்களில் செவ்வக விளக்கப்படம்-ஆறாம் வகுப்பு கணக்கு செயல்திட்டம்

வண்ண ரிப்பன்களில்  செவ்வக விளக்கப்படம்-ஆறாம் வகுப்பு கணக்கு செயல்திட்டம்
   
     வண்ண ரிப்பன்களைப் பயன்படுத்தி எங்கள் மாணவ, மாணவர்கள் உருவாக்கிய செவ்வக  விளக்கப்படம் (BAR DIAGRAM)


அசத்தலான CCE செயல் திட்டங்கள்

ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் வளரறி செயல்பாடு

     வடிவியல் பகுதியிலுள்ள முக்கோணங்களின் ஆறு வகைகளை எளிதில் மாணவர் மனதில் நிலைநிறுத்த, கீழ்க்கண்டவாறு ஓர் எளிய செயல்திட்டத்தை மாணவர்களுக்கு அளிக்கலாம்.
      கடைகளில் ஸ்டிக்கர் பொட்டுகள் தொங்கவிடப்பட்டு,காலியாகிப் போன பிளாஸ்டிக் கவரை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் அதில் உள்ள 12 உறைகளுக்கு தகுந்தவாறு சார்ட அட்டைகளை வெட்டிக் கொள்ள வேண்டும். அதில் ஆறு அட்டைகளில் ஆறு வகையான முக்கோணங்களின் படங்களையும்,அடுத்த ஆறு அட்டைகளில் அவற்றின் பெயர்களையும் எழுதி அதில் செருகவும்.
     அசத்தலான செயல்திட்டம் தயார்..