கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

சனி, 23 ஆகஸ்ட், 2014

கோவை மண்டல அளவில் நடைபெற்ற திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூலத்துறை மாணவன் முதலிடம்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பேச்சுப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 10 மையங்களில் பல்வேறு திருக்குறள் தலைப்புகளில் இப்போட்டி நடைபெறும்.ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 10 மாணவர்களை தேர்வு செய்யப்படுவர்.தேர்வு பெற்ற மாணவர்கள்  சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.அங்கு முதல் மூன்று இடங்கள் பெறுவோர் முறையே 10000,7500 மற்றும் 5000 என பரிசுகள் பெறுவர்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கண்காட்சி

      கோவை மாவட்டம்,மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் "உடல் நலச் சங்கம்"[HEALTH CLUB]  சார்பாக இதய நோய்கள்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வராதவாறு தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது. 
      இதில்  மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு...
*சர்க்கரை நோய் விழிப்புணர்வு
*இதயம் காப்போம்
*மூலிகைகளும் அதன் பயன்களும்
*புகை பிடித்தலின் தீமைகள்
*சரிவிகித உணவு
*உணவே மருந்து
*முளை கட்டிய தானியங்களின் மகத்துவம்
*புற்று நோய்-காரணங்களும் தடுக்கும் முறைகளும்
ஆகிய தலைப்புகளில் மனவரைபடங்கள் வரைந்து அவற்றிக்கான விளக்கங்களைத் தொகுத்தனர். இந்த மனவரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடல் நலச் சங்க உறுப்பினர்கள் தாங்கள் வரைந்த மனவரைபடங்களின் துணை கொண்டு கருத்துக்களை விளக்கினர்.

மூலத்துறை பள்ளியில் நடைபெற்ற 68ஆவது சுதந்திர தின கொண்டாட்ட புகைப்படங்கள்



திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மாற்றத்தை ஏற்படுத்திய மாணவர்கள்

எங்கள் பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி விடும் போது, மாணவர்கள் கட்டுப்பாடின்றி ஓடி, சிறுசிறு விபத்துகளில் மாட்டிக் கொள்வது ஒரு நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வந்தது.
இதை எப்படி மாற்றுவது என மாணவர்கள் யோசித்ததன் விளைவு... உருவானது மாணவர்களே அமைத்த  சாலை பாதுகாப்பு படை.
 13 மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது தினமும் மாணவர்களை கண்காணித்து மாணவர்கள் வரிசையாய் செல்ல வழிகாட்டுகிறது.  இதனால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.