கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மூலத்துறை அரசுப்பள்ளியில் மாணாக்கர் கணித மன்றம் தொடக்க விழா
     அரசுப்பள்ளி  மாணவர்கள், கல்வி இணைச் செயல்பாடுகளில் திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வாரியாக மன்றங்கள் அமைத்துச் செயல்பட உத்தரவிட்டுள்ளது. அதன்படி   மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29-11-2013) மாணாக்கர் கணித மன்றம் தொடங்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை வகித்து மன்றத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியை முனியம்மாள் வரவேற்புரை நல்கினார். “பூஜ்ஜியம் கண்டுபிடிப்பில் இந்தியர்களின் பங்கு” என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிக்குமார் பேசினார். “அன்றாட வாழ்வில் கணிதத்தின் அவசியம்” என்ற தலைப்பில் ஆசிரியைகள் அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் பேசினர்.
 ‘கணித விநாடி வினாப் போட்டி’,
 ‘சொல்லுங்கள்..! வெல்லுங்கள்..!!’,
 ‘புதிரை விடுவித்தால் நீ புத்திசாலி’
என கணிதம் தொடர்பான பல்வேறு போட்டிகள் மாணவர்களால் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கணித ஆசிரியர் திருமுருகன் செய்திருந்தார். 

உடல் நலச் சங்க தொடக்க விழாவும் தொற்றா நோய் விழிப்புணர்வும்

எங்கள் பள்ளியில் நடைபெற்ற தொற்றா நோய்கள் விழிப்புணர்வுக் கொண்டாட்டங்கள் -புகைப்படங்கள்


வெள்ளி, 13 டிசம்பர், 2013

சுட்டி விகடனில்  வெளியான எங்கள் மாணவர்களின் சூப்பரான இரண்டாம் பருவ செயல்திட்டங்கள் 


புதன், 9 அக்டோபர், 2013

கொடுத்து மகிழ்ந்தோம்...! நன்றியால் நெகிழ்ந்தோம்...!!



எங்கள்  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 08-10-2013 அன்று  '*கொடுத்து மகிழும் வார விழா'  * எனப்படும் *JOY OF GIVING
WEEK *விழா*  *கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் அளித்த பாக்கெட் மணி [POCKET MONEY] தொகைகளான ரூ.2, ரூ.3 மற்றும் ரூ.5 ஆகியவற்றை சேர்த்து வைத்து பூங்கொத்துகள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாங்கி பள்ளியில் பணிபுரியும் தங்களது ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.மேலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு மீத்திறன் பெற்ற
மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்து உதவி மகிழ்ந்தனர்.
    கொடுத்தும் உதவியும் மகிழ்ந்த மாணவர்களுக்கு தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் திருமுருகன்,ரவிக்குமார் ஆசிரியைகள் முனியம்மாள், அமுதா,அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.