ஸ்ரீராம் இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பேச்சுப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 10 மையங்களில் பல்வேறு திருக்குறள் தலைப்புகளில் இப்போட்டி நடைபெறும்.ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 10 மாணவர்களை தேர்வு செய்யப்படுவர்.தேர்வு பெற்ற மாணவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.அங்கு முதல் மூன்று இடங்கள் பெறுவோர் முறையே 10000,7500 மற்றும் 5000 என பரிசுகள் பெறுவர்.
கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
பக்கங்கள்
சனி, 23 ஆகஸ்ட், 2014
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014
மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கண்காட்சி
கோவை மாவட்டம்,மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் "உடல் நலச் சங்கம்"[HEALTH CLUB] சார்பாக இதய நோய்கள்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வராதவாறு தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு...
*சர்க்கரை நோய் விழிப்புணர்வு
*இதயம் காப்போம்
*மூலிகைகளும் அதன் பயன்களும்
*புகை பிடித்தலின் தீமைகள்
*சரிவிகித உணவு
*உணவே மருந்து
*முளை கட்டிய தானியங்களின் மகத்துவம்
*புற்று நோய்-காரணங்களும் தடுக்கும் முறைகளும்
ஆகிய தலைப்புகளில் மனவரைபடங்கள் வரைந்து அவற்றிக்கான விளக்கங்களைத் தொகுத்தனர். இந்த மனவரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடல் நலச் சங்க உறுப்பினர்கள் தாங்கள் வரைந்த மனவரைபடங்களின் துணை கொண்டு கருத்துக்களை விளக்கினர்.
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
மாற்றத்தை ஏற்படுத்திய மாணவர்கள்
எங்கள் பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி விடும் போது, மாணவர்கள் கட்டுப்பாடின்றி ஓடி, சிறுசிறு விபத்துகளில் மாட்டிக் கொள்வது ஒரு நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வந்தது.
இதை எப்படி மாற்றுவது என மாணவர்கள் யோசித்ததன் விளைவு... உருவானது மாணவர்களே அமைத்த சாலை பாதுகாப்பு படை.
13 மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது தினமும் மாணவர்களை கண்காணித்து மாணவர்கள் வரிசையாய் செல்ல வழிகாட்டுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

வியாழன், 17 ஜூலை, 2014
புதன், 16 ஜூலை, 2014
திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி
திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி
போட்டி ரொம்ப எளிது. 1330 குறள்களைப் பார்த்து பிழையின்றி எழுதி அனுப்ப வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.30 மட்டும்.M.O./D.D.எதில் வேண்டுமானாலும் அனுப்பலாம். A4 தாளில் மட்டுமே எழுத வேண்டும். இரு பக்கங்களிலும் எழுதலாம். பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். மாவட்டந்தோறும் சிறப்பாக எழுதும் மூவர்க்கு முறையே ரூ.500/-,ரூ.300/-,ரூ.200/-க்கான பரிசு புத்தகங்களாக வழங்கப்படும். பங்கு பெற்ற எல்லா மாணவர்களுக்கும் பங்களிப்புச் சான்று வழங்கப்படும்.
31-08-2014 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 30-09-2014க்குள் பரிசு வழங்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
கோ.ஈ.பொன்.கல்யாண சுந்தரம்,
அறக்கட்டளைகளின் பணி ஒருங்கிணைப்பாளர்,
அய்யன் திருவள்ளுவர் கல்வி மற்றும் பொதுச் சேவை அறக்கட்டளை,
1/6 தெற்குத் தெரு,கோட்டைக் கருங்குளம்,
இராதாபுரம் வட்டம்-627 112
திருநெல்வேலி மாவட்டம்
செல்:9489308816
SOURCE: தமிழ் இலெமூரியா ஜூன் 2014 மாத இதழ்

செவ்வாய், 15 ஜூலை, 2014
மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா
மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி
வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்க,பொறுப்பு தலைமையாசிரியர் திருமுருகன் வரவேற்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)