கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

திங்கள், 24 செப்டம்பர், 2018

DESIGN FOR CHANGE- மாற்றத்தை உருவாக்கிய மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணாக்கர்கள்..

DESIGN FOR CHANGE- மாற்றத்தை உருவாக்கிய மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணாக்கர்கள்..

       எங்கள் பள்ளி மாணாக்கர்கள் எங்கள் வளாகத்தில் பயனற்றுக் கிடந்த பழைய டயர்களை தங்களது சுயமுயற்சியால் வண்ணம் தீட்டி சில மாற்றங்களை செய்து பயனுள்ள பொருட்களாக மாற்றியுள்ளனர்.
     பள்ளிக் குழந்தைகள் அமர்ந்து எழுதும் வகையான டெஸ்க்குகள், நூலக புத்தகங்கள் அடுக்கப் பயன்படும் தாங்கிகள், தண்ணீர் குழாய் சுருட்டி வைக்கும் பாதுகாப்பு வளையம் , குழந்தைகள் அமர்ந்து விளையாட ஊஞ்சல், கேரம் போர்டு வைத்து விளையாடும் ஸ்டேண்ட் என பலவிதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இவற்றைக் கண்டு ஊர்மக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி விட்டுச் செல்கின்றனர்..


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உலகிலேயே முதன்முறையாக whatsappல் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

உலகிலேயே முதன்முறையாக whatsappல்
 கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்.

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர் அஞ்சல், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் சார்பில் whatsapp மூலம் கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டி  போட்டிகள் நடத்தவுள்ளோம்.

தலைப்பு

1.விதை அதை நீ விதை
2.வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்.
3.இயற்கையை காப்போம்.

☝ஏதேனும் ஒரு தலைப்பில்

(இயற்கையை பாதுகாக்க வேண்டும்,  மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கருப்பொருளை தாண்டிச்செல்லக்கூடாது)


ஆம் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே.

நீங்கள் எழுதிய(ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் ஏற்கப்படமாட்டாது) கவிதையை,கட்டுரையை, whatsapp ல் பதிவு செய்து 9994713129 என்ற M.R.இரகுநாதன், தாளாளர், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் எண்ணிற்கு அனுப்பவும்.

இதேபோல் பேச்சுப்போட்டியில்  உங்களுடைய தலைப்புக்குரிய உரையை பதிவு செய்து 9994713129   என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

பேச்சுப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களுடைய குரலில் வீடியோ  பதிவு
 செய்யவேண்டும்.

 *வயது வரம்பு இல்லை* .

 *படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 30.09.2018*

ஒரே படைப்பை பலரும் அனுப்பினால் முதலில் வரும் படைப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எல்லா நிலைகளிலும் கல்லூரியின் முடிவே இறுதியானது.

 பரிசுத்தொகை

ஒவ்வொரு போட்டிக்கும்

முதல் பரிசு ரூபாய் 1000

இரண்டாம் பரிசு ரூபாய் 500

மூன்றாவது பரிசு 250

பரிசுத்தொகை நேரிலோ, வங்கி மூலமோ அல்லது  அஞ்சல் நிலையம் மூலமோ தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


ஏதேனும் சந்தேகம் என்றால் 9994713129 என்ற எனது எண்ணிற்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.




மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்
இயற்கையை பாதுகாப்போம் .


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

உங்கள் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஓர் அருமையான வாய்ப்பு

‘கற்றல் இனிது’ சிறுவர் மாத இதழுக்குப் படைப்புகள் அனுப்பலாம்...!

‘கற்றல் இனிது’ சிறுவர் மாத இதழ் செப்டம்பர் மாதம் முதல் 48 பக்கங்களில் அழகிய வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. இந்த இதழில் உங்கள் படைப்புகளும் இடம் பெற வேண்டுமா...? 

குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள், சம்பவங்கள், குட்டிக்கதைகள், துணுக்குகள்... என்று குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி, மரபு வழி, சுற்றுச்சூழல், சிறுவர் நலன் உள்ளிட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் படைப்புகளுக்கு வெளியிடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.  அனுப்பப்படும் படைப்புகள் பிற இதழ்களில் வெளியாகாத படைப்புகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும், கீழ்ப்பகுதியில் படைப்பாளரின் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். படைப்புகளை வெளியிடவோ, நிராகரிக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

தற்போதைய நிலையில் படைப்புகளுக்குப் பரிசாகவோ, அன்பளிப்பாகவோ எவ்விதத் தொகையும் வழங்கப்படாது. ஆசிரியர் குழு தேர்வு செய்து வெளியாகும் படைப்புகள் இடம் பெற்ற இதழ் மட்டும் படைப்பாளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் படைப்புகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து ஆசிரியர் குழுவிற்கான katralinithu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.