கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

திங்கள், 6 மே, 2013

ஜூன் மாத முக்கிய தினங்கள்

ஜூன் மாத முக்கிய தினங்கள்

ஜூன் 1 - சர்வதேச குழந்தைகள் தினம்

ஜூன் 4- சர்வதேச வன்முறைக்குள்ளான அறியாக் குழந்தைகள் தினம்

ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் நாள்

ஜூன் 8 - உலக கடல் நாள்

ஜூன் 12 - குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜூன் 17 - சர்வதேச வறட்சி எதிர்ப்பு நாள்

ஜூன் 20 - உலக அகதிகள்  நாள்

ஜூன் 23 - ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை நாள்
  

சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி


   கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம்



மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 29 -04-2013 அன்று சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
  காலை 9:30 மணியளவில் நடைபெற்ற பேரணியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சண்முகம் தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை பத்திரம்மாள் பேரணியை வழிநடத்தினார்.வார்டு உறுப்பினர்கள் திரு.சங்கரராஜப்பன்,திரு.குமார் மற்றும் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் திரு.சண்முகம்,திரு.காமராஜ்,திருமதி.சாந்தா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் திருமுருகன்,ரவிக்குமார்,முனியம்மாள், அமுதா, அங்கையற்ண்ணி, பிரேமாள் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
   பள்ளியின் நுழைவாயிலில் தொடங்கிய பேரணியானது ஊரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று,மீண்டும் பள்ளிக்கு 11:30 மணியளவில் வந்து நிறைவு பெற்றது. பேரணியில் மாணவர்கள் கல்வியின் அவசியம் பற்றியும், அரசுப்பள்ளிகளில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் “விழிப்புணர்வு கோஷங்களை” எழுப்பினர். மேலும் சென்ற கல்வியாண்டில் மூலத்துறை பள்ளியின் சாதனைகளான…..
1.பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்
2.அதிகாரிகளால் பாராட்டப்பட்ட பள்ளியின் “ஸ்மார்ட் கிளாஸ்” பயன்பாடு
3.மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம்
போன்றவை பட்டியலிடப்பட்டு பள்ளி சேர்க்கை வலியுறுத்தப்பட்டது.
  ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் “ஸ்ரீசௌடேஸ்வரி சிட்பண்ட்ஸ்” சார்பாக திரு.கோபாலன் மற்றும் திரு.மகேஸ்வரன் ஆகியோர் பிஸ்கட்டுகளையும் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர்.