கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வியாழன், 17 ஜூலை, 2014

சுட்டி விகடனில் எங்கள் பள்ளி மாணவர்களின் FA(a) செயல்பாடு


பாரதியார் தின குடியரசு தின சதுரங்கப் போட்டிகள்

ஹிந்து தமிழ் நாளிதழில் எங்களது மாணவர்களின் படைப்புகள்

ஹிந்து தமிழ் நாளிதழில் எங்களது மாணவர்களின் படைப்புகள்

வண்ணக் கதிர் வார இதழில் எங்கள் மாணவர்களின் படைப்புகள்

வண்ணக் கதிர் வார இதழில் எங்கள் மாணவர்களின் படைப்புகள்

புதன், 16 ஜூலை, 2014

திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி

திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி

      போட்டி ரொம்ப எளிது. 1330 குறள்களைப் பார்த்து பிழையின்றி எழுதி அனுப்ப வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.30 மட்டும்.M.O./D.D.எதில் வேண்டுமானாலும் அனுப்பலாம். A4 தாளில் மட்டுமே எழுத வேண்டும். இரு பக்கங்களிலும் எழுதலாம். பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். மாவட்டந்தோறும் சிறப்பாக எழுதும் மூவர்க்கு முறையே ரூ.500/-,ரூ.300/-,ரூ.200/-க்கான பரிசு புத்தகங்களாக வழங்கப்படும். பங்கு பெற்ற எல்லா மாணவர்களுக்கும் பங்களிப்புச் சான்று வழங்கப்படும்.
       31-08-2014 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 30-09-2014க்குள் பரிசு வழங்கப்படும்.
      அனுப்ப வேண்டிய முகவரி
    கோ.ஈ.பொன்.கல்யாண சுந்தரம்,
   அறக்கட்டளைகளின் பணி ஒருங்கிணைப்பாளர்,
   அய்யன் திருவள்ளுவர் கல்வி மற்றும் பொதுச் சேவை அறக்கட்டளை,
  1/6 தெற்குத் தெரு,கோட்டைக் கருங்குளம்,
  இராதாபுரம் வட்டம்-627 112
  திருநெல்வேலி மாவட்டம்
  செல்:9489308816

SOURCE: தமிழ் இலெமூரியா ஜூன் 2014 மாத இதழ்

செவ்வாய், 15 ஜூலை, 2014

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா
    கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி 
வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்க,பொறுப்பு தலைமையாசிரியர் திருமுருகன் வரவேற்றார்.

சனி, 12 ஜூலை, 2014

ஒன்றிய அளவிலான துளிர் வினாடி வினா போட்டியில் மூலத்துறை பள்ளி முதலிடம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஒன்றிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி வினா போட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மெட்ரோ மெட்ரிக் பள்ளி  கலையரங்கில் நேற்று (12-07-2014) நடைபெற்றது.இதில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் ர.கோகுல்(ஆறாம் வகுப்பு),ம.அருண்குமார்(ஏழாம் வகுப்பு),செ.லோகேஸ்வரன்(எட்டாம் வகுப்பு) ஆகியோர் அடங்கிய குழு முதல் பரிசை வென்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளது.

வியாழன், 10 ஜூலை, 2014

மூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம்

மூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம்
     அரசுப்பள்ளி  மாணவர்கள்,  சதுரங்க ஆட்டத்தில்  திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளி மாணவர்களும் செஸ் போட்டிகளில் பயிற்சி பெறுதலை ஊக்குவித்து வருகிறது. அதன்படி   மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26-06-2014) சதுரங்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.