கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உலகிலேயே முதன்முறையாக whatsappல் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

உலகிலேயே முதன்முறையாக whatsappல்
 கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்.

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர் அஞ்சல், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் சார்பில் whatsapp மூலம் கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டி  போட்டிகள் நடத்தவுள்ளோம்.

தலைப்பு

1.விதை அதை நீ விதை
2.வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்.
3.இயற்கையை காப்போம்.

☝ஏதேனும் ஒரு தலைப்பில்

(இயற்கையை பாதுகாக்க வேண்டும்,  மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கருப்பொருளை தாண்டிச்செல்லக்கூடாது)


ஆம் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே.

நீங்கள் எழுதிய(ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் ஏற்கப்படமாட்டாது) கவிதையை,கட்டுரையை, whatsapp ல் பதிவு செய்து 9994713129 என்ற M.R.இரகுநாதன், தாளாளர், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் எண்ணிற்கு அனுப்பவும்.

இதேபோல் பேச்சுப்போட்டியில்  உங்களுடைய தலைப்புக்குரிய உரையை பதிவு செய்து 9994713129   என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

பேச்சுப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களுடைய குரலில் வீடியோ  பதிவு
 செய்யவேண்டும்.

 *வயது வரம்பு இல்லை* .

 *படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 30.09.2018*

ஒரே படைப்பை பலரும் அனுப்பினால் முதலில் வரும் படைப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எல்லா நிலைகளிலும் கல்லூரியின் முடிவே இறுதியானது.

 பரிசுத்தொகை

ஒவ்வொரு போட்டிக்கும்

முதல் பரிசு ரூபாய் 1000

இரண்டாம் பரிசு ரூபாய் 500

மூன்றாவது பரிசு 250

பரிசுத்தொகை நேரிலோ, வங்கி மூலமோ அல்லது  அஞ்சல் நிலையம் மூலமோ தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


ஏதேனும் சந்தேகம் என்றால் 9994713129 என்ற எனது எண்ணிற்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.




மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்
இயற்கையை பாதுகாப்போம் .


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

உங்கள் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஓர் அருமையான வாய்ப்பு

‘கற்றல் இனிது’ சிறுவர் மாத இதழுக்குப் படைப்புகள் அனுப்பலாம்...!

‘கற்றல் இனிது’ சிறுவர் மாத இதழ் செப்டம்பர் மாதம் முதல் 48 பக்கங்களில் அழகிய வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. இந்த இதழில் உங்கள் படைப்புகளும் இடம் பெற வேண்டுமா...? 

குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள், சம்பவங்கள், குட்டிக்கதைகள், துணுக்குகள்... என்று குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி, மரபு வழி, சுற்றுச்சூழல், சிறுவர் நலன் உள்ளிட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் படைப்புகளுக்கு வெளியிடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.  அனுப்பப்படும் படைப்புகள் பிற இதழ்களில் வெளியாகாத படைப்புகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும், கீழ்ப்பகுதியில் படைப்பாளரின் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். படைப்புகளை வெளியிடவோ, நிராகரிக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

தற்போதைய நிலையில் படைப்புகளுக்குப் பரிசாகவோ, அன்பளிப்பாகவோ எவ்விதத் தொகையும் வழங்கப்படாது. ஆசிரியர் குழு தேர்வு செய்து வெளியாகும் படைப்புகள் இடம் பெற்ற இதழ் மட்டும் படைப்பாளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் படைப்புகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து ஆசிரியர் குழுவிற்கான katralinithu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

8-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி, 8 அறிவியல் -தமிழ் வழி, 7 தமிழ் பாடக்குறிப்புகள் (ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை..)

8-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி, 8 அறிவியல் -தமிழ் வழி, 
7 தமிழ் பாடக்குறிப்புகள் 
(ஆகஸ்ட் 20  முதல் ஆகஸ்ட் 24 வரை..)






7-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி பாடக்குறிப்புகள்- ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை..

7-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி பாடக்குறிப்புகள்- ஆகஸ்ட் 20  முதல் ஆகஸ்ட் 24 வரை..


New syllabus - 6th Mathematics Notes of Lesson for English medium from August 20 to August 24

New syllabus - 6th Mathematics Notes of Lesson for English medium from August 20  to August 24

புதன், 15 ஆகஸ்ட், 2018

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஹேமாவின் அசத்தலான திருக்குறள் பேச்சு..


மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஹேமாவின் அசத்தலான திருக்குறள் பேச்சு..

காணொளியைக் காண கீழே click செய்யவும்..
https://youtu.be/bG2Zih9IR5M

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

முதலிடமும் எமதே..மூன்றாமிடமும் எமதே.


🙂நேற்று கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் த.ஜீவஜோதிகா முதலிடமும் சி.ஹேமா மூன்றாமிடமும் பெற்றனர்.🙂
🏆மேலும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கால் இறுதிச் சுற்றில் எம்பள்ளி மாணக்கர்கள் 10 பேர் கலந்து கொண்டு அரையிறுதிச் சுற்றுக்கு 5 பேர் தேர்வானார்கள். அதாவது அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வானோர் 10 பேரில் பாதியளவு எம்பள்ளி மாணாக்கர்களே...🏆
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
இறுதிச்சுற்றில் பேசிய 5 பேரில் 3 பேர் ஆறுதல் பரிசு பெற.. இருவர் முதல்பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
🎖️🎖️🥉🎖️🎖️ மேலும்..முதலிடம் பெற்ற ஜீவஜோதிகா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். வரும் அக்டோபர் 6 இல் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் பேசும் நிகழ்வு மக்கள் தொலைக்காட்சியில் நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ளது. அங்கு அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெறும்பட்சத்தில் ரூ.10000 அல்லது ரூ 7500 அல்லது ரூ5000 பரிசு பெற வாய்ப்புள்ளது..🎖️🎖️🥉🎖️🎖️
🎈 பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணாக்கர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்🎈