கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

ஞாயிறு, 15 ஜூன், 2014

எங்கள் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்
     காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்   (12-06-2014) அன்று கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் வரவேற்றார். கற்றலின் அவசியத்தை பற்றி ஆசிரியர் திருமுருகன் பேசினார். சிறுவயதில் வேலைக்குச் சென்றால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஆசிரியை முனியம்மாள் பேசினார். இன்றைய தினத்தின் அவசியத்தை பற்றி ஆசிரியை அங்கையற்கண்ணி பேசினார்.  முடிவில் ஆசிரியை பிரேமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் எடுத்துக் கொண்டனர். இத்தினத்தை ஒட்டி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.