கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

திங்கள், 8 செப்டம்பர், 2014

அஞ்சாத சிறுமி
   சில சிறுமிகள் வீதியோரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக ஒரு குதிரை வண்டி மிகவும் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவன் ஒரு ஆங்கிலேயன். அவன் வண்டி ஓட்டுபவனிடம் ,"இன்னும் வேகமாக ஓட்டு. சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.
    வண்டிக்காரன் வேகமாக ஓட்டிக் கொண்டே சிறுமிகளைப் பார்த்து, "விலகுங்கள்.. விலகுங்கள்"  என்று கத்திக் கொண்டே வந்தான்.  விளையாட்டில் தீவிரமாக இருந்த சிறுமிகள் காதில் அவன் கூச்சல் விழவில்லை.
   விலகாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது ஆங்கிலேயனுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
     ஆங்கிலேயன் வண்டிக்காரனிடம், "அந்தப் பிள்ளைகள் மீதே ஓட்டு.." என்று கத்தினான். அதைக் கேட்டு பயந்த சிறுமிகள் சிதறியோட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களில் ஒரு சிறுமி மட்டும் பயந்து ஓடாமல், துணிந்து வண்டியின் முன்னே நின்றாள். வண்டிக்காரன் அவசரமாக வண்டியை நிறுத்தினான்.
    உடனே அந்தச் சிறுமி, "ஊருக்குள் இவ்வளவு வேகமாகவா ஓட்டுவது? அப்படி என்ன தலை போகிற அவசரம்?" என்று ஆவேசமாகக் கத்தினாள். அவளது துணிச்சலைக் கண்டு வியந்த மற்ற சிறுமிகளும் வந்து வண்டியின் குறுக்கே மறித்து நின்று கொண்டனர்.
      வண்டி தடுக்கப்பட்டதால் மேலே செல்ல முடியாமல் போனது. ஆங்கிலேயனின் மிரட்டல் அவர்களிடம் எடுபடவில்லை. வண்டி பின்னோக்கி வேறு பாதையில் சென்றது.
    அந்த ஆங்கிலேயனின் மிரட்டலையும் அதிகாரத்தையும் துச்சமென மதித்து எதிர்த்து நின்ற அந்த வீரச் சிறுமிதான் பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடி இன்னுயிர்த் தியாகம் செய்த ஜான்சி ராணி இலட்சுமி பாய்


'ஆன்றோர் வாழ்வில் இளமை நிகழ்வுகள்' எனும் நூலில் இருந்து தகவல் திரட்டியவர்

ப.கவிஸ்ரீ
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

கருத்துகள் இல்லை: