கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

முதலிடமும் எமதே..மூன்றாமிடமும் எமதே.


🙂நேற்று கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் த.ஜீவஜோதிகா முதலிடமும் சி.ஹேமா மூன்றாமிடமும் பெற்றனர்.🙂
🏆மேலும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கால் இறுதிச் சுற்றில் எம்பள்ளி மாணக்கர்கள் 10 பேர் கலந்து கொண்டு அரையிறுதிச் சுற்றுக்கு 5 பேர் தேர்வானார்கள். அதாவது அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வானோர் 10 பேரில் பாதியளவு எம்பள்ளி மாணாக்கர்களே...🏆
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
இறுதிச்சுற்றில் பேசிய 5 பேரில் 3 பேர் ஆறுதல் பரிசு பெற.. இருவர் முதல்பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
🎖️🎖️🥉🎖️🎖️ மேலும்..முதலிடம் பெற்ற ஜீவஜோதிகா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். வரும் அக்டோபர் 6 இல் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் பேசும் நிகழ்வு மக்கள் தொலைக்காட்சியில் நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ளது. அங்கு அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெறும்பட்சத்தில் ரூ.10000 அல்லது ரூ 7500 அல்லது ரூ5000 பரிசு பெற வாய்ப்புள்ளது..🎖️🎖️🥉🎖️🎖️
🎈 பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணாக்கர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்🎈









'தமிழ் இந்து' 15-08-2018 நாளிதழில்..
20/08/2018 தினமலர் நாளிதழ் செய்தி..

கருத்துகள் இல்லை: