கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உலகிலேயே முதன்முறையாக whatsappல் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

உலகிலேயே முதன்முறையாக whatsappல்
 கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்.

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர் அஞ்சல், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் சார்பில் whatsapp மூலம் கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டி  போட்டிகள் நடத்தவுள்ளோம்.

தலைப்பு

1.விதை அதை நீ விதை
2.வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்.
3.இயற்கையை காப்போம்.

☝ஏதேனும் ஒரு தலைப்பில்

(இயற்கையை பாதுகாக்க வேண்டும்,  மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கருப்பொருளை தாண்டிச்செல்லக்கூடாது)


ஆம் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே.

நீங்கள் எழுதிய(ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் ஏற்கப்படமாட்டாது) கவிதையை,கட்டுரையை, whatsapp ல் பதிவு செய்து 9994713129 என்ற M.R.இரகுநாதன், தாளாளர், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் எண்ணிற்கு அனுப்பவும்.

இதேபோல் பேச்சுப்போட்டியில்  உங்களுடைய தலைப்புக்குரிய உரையை பதிவு செய்து 9994713129   என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

பேச்சுப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களுடைய குரலில் வீடியோ  பதிவு
 செய்யவேண்டும்.

 *வயது வரம்பு இல்லை* .

 *படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 30.09.2018*

ஒரே படைப்பை பலரும் அனுப்பினால் முதலில் வரும் படைப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எல்லா நிலைகளிலும் கல்லூரியின் முடிவே இறுதியானது.

 பரிசுத்தொகை

ஒவ்வொரு போட்டிக்கும்

முதல் பரிசு ரூபாய் 1000

இரண்டாம் பரிசு ரூபாய் 500

மூன்றாவது பரிசு 250

பரிசுத்தொகை நேரிலோ, வங்கி மூலமோ அல்லது  அஞ்சல் நிலையம் மூலமோ தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


ஏதேனும் சந்தேகம் என்றால் 9994713129 என்ற எனது எண்ணிற்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.




மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்
இயற்கையை பாதுகாப்போம் .


கருத்துகள் இல்லை: