கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 15 ஜூலை, 2014

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா
    கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி 
வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்க,பொறுப்பு தலைமையாசிரியர் திருமுருகன் வரவேற்றார்.

'காமராசரின் கல்விப்பணி' என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிக்குமார் பேசினார். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை முனியம்மாள் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அமுதா,அங்கையற்கண்ணி ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: